Nilevarasu's Blog

17-10-2007 அன்றிலிருந்து….
தேதி : 17-10-2007

நேரம் : காலை 7 மணி

இடம் : கிண்டி பேருந்து நிலையம்

காலை நேரம் என்பதால், பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தது.எல்லோரும் பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.நானும் கோவை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.

நான்தாங்க கிருஷ்ணா…என்னை பற்றி சுருக்கமா சொல்லனும்னா….”சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் வரும் கமலை போல பெண்களை பார்த்தவுடன் பேசிவிடுவேன் , அது மட்டுமல்ல கிடைத்தால் சந்தோஷமாக இருக்கவும் செய்வேன்..

அப்படித்தான் அன்று காலை கிண்டியில் நின்று கொண்டிருந்த நேரம், 23 வயசு இருக்கும் அவளுக்கு, என்னடா வயசை சரியாக கூறுகிறேன் என்று பார்க்கறீர்களா? அந்த அளவிற்கு அனுபவம்…ம் ம் … இரண்டு நிமிடம் பார்த்ததிலியே அவளோடு பேச ஆரம்பித்து விட்டேன்…நான் ஊருக்கு போகவில்லையெனில் அவளை அழைத்துக் கொண்டு மாயாஜால் போய் இருக்கலாம் என நினைத்து கொண்டேன்… 7:45 மணிக்கு கோவை பஸ் ஒன்று வருவதை கண்டு அவளிடம் மொபைல் நம்பரை பெற்றுக்கொண்டு பிரிய மனமில்லாமல் நகர்ந்தேன்.

பஸ் அருகில் வந்ததும் பார்த்தேன், அதாவது “எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்ங்கற மாதிரி” பஸ் பேருக்குதான் சூப்பர் டீலக்ஸ் , உள்ளே ஒரு டீலக்ஸ் பிகரும் கண்ணுக்கு தெரியல..

ஊருக்கு முக்கிய விஷயமாக செல்வதால் பஸ்ஸில் கூட்டம் இருந்தும் ஏறிக்கொண்டேன். சீட் எதுவும் காலியில்லை. கண்டக்டர் வந்து இரண்டாவது வரிசையில் ஒருவர் மேல்மருவத்தூரில் இறங்கி விடுவார் அங்கு நீ உட்கார்ந்து கொள் என்றார். சரி என்று அங்கு நகர்ந்து நின்றேன்.

மாயாஜால் கனவில் நின்று கொண்டிருக்கையில், செல்போன் சிணுங்கியது..எடுத்து பார்த்து சிரித்தேன். “சிக்கிடுச்சுடா மாங்காய்” என எண்ணிக் கொண்டு எடுத்து பேச ஆரம்பித்தேன். சிறிது நேரம் கடலை வறுத்துவிட்டு செல்லை ஆப் செய்தேன். அடுத்த வாரம் மாயாஜால் போய்டுவோம்தான் போலிருக்கே…”இலவசமாய் கிடைத்த மாங்காயை யார் தான் விடுவாங்க”

பாக்கட்டில் போட்ட செல் மீண்டும் பாடியது..எடுத்து பார்க்கையில் அப்பா .

எங்கே வர்றப்பா ? என்றார்

தாம்பரம் தாண்டிவிட்டேன் என்றேன். சரி கோவை வந்ததும் போன் செய் என்றுவிட்டு வைத்தார்.

சரி வேறு மாங்காய் கிடைக்குமா என திரும்பி பார்க்கையில், நான் நிற்கும் முன் இருக்கையில் 60 வயது பாட்டியும் 10 வயது சிறுவனும் தெரிந்தனர். அப்படியே கொஞ்சம் எட்டிப் பார்க்கையில் ஒரு 24 வயது மாங்காய் கண்ணுக்கு பட்டது.

“அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னை பார்த்து

பஞ்சனையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து”

என்று மனசுக்குள் பாடியது. பல பெண்களை பார்த்த எனக்கு, இவள் அழகு கிரங்கடித்தது , காரணம் பிரம்மாவின் ஓவர் டைம் உழைப்பு அவளிடம் தெரிந்தது.

என் மனதில் ஓடிய பாடல் அவளுக்கும் கேட்டோ என்னவோ அவளும் திரும்பி பார்த்து புன்னகைத்தாள்.

அவள் புன்னகை கொடுத்த தைரியத்தில் டிரைவர்க்கு அருகில் இருக்கும் கண்ணாடியில் தெரிந்த அவளை பார்க்கையில், அவளும் என்னை பார்ப்பது தெரிந்தது. இப்படி பார்த்துக் கொண்டே செங்கல்பட்டு வந்தடையும் போது செல்போன் சிணுங்கியது, எடுத்து பார்த்தேன் பூஜை வேளை கரடியாக மைதிலி.

மைதிலி என் அத்தை மகள். நாளை எங்களுக்கு நிச்சயதார்தம்.என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே “என்ன மைதிலி என்றேன்”

மாமா அது வந்து…..வந்து…

இல்லாத பொறுமையோடு “என்ன சொல்லு” என்றேன்

உங்களுக்கே தெரியும் நான் மேல படிக்க விரும்புறேன்னு.

நீங்க மனசு வச்சீங்கன்னா, அப்பாகிட்ட பேசி நம்ம கல்யாணத்தை 2 வருஷம் தள்ளிப் போட முடியும் …சொல்லறீங்களா?

நான் மௌனமாக இருக்கையில் என் கண்கள் கண்ணாடியில் தெரிந்த தேவதையை பார்த்தது …. என் உதடுகள் “சரி மைதிலி ஒன்னும் பிரச்சனையில்லை அப்பாகிட்ட நான் பேசறேன் என்றது.

Thanks மாமா …thanks…என்றபடி போனை வைத்தாள்.

அப்பாவிடம் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மேல்மருவத்தூர் வந்தது. இருக்கை காலியாக , அமர்ந்து கொண்டேன். இப்பொழுது தேவதையின் தரிசனம் தெளிவாக கிடைத்தது. அது போக ஜன்னல் விளிம்பிலும் அவள் முகம் பார்க்கையில் அவள் கையில் இருந்த செல்போனை பார்த்து எனக்கு ஒரு யோசனை வந்தது.

அவளிடம் “Excuse Me” என்றேன் ..

நான் கூப்பிடுவேன் என எதிர்பார்த்தவள் போல் உடனே திரும்பினாள்.

“என் செல்போன் ல பேலன்ஸ் இல்லை, உங்க போனை கொஞ்சம் குடுக்க முடியுமா, ஒரு கால் பண்ணிக்கறேன்”

அவளும் சிறு புன்னைகையுடன் கொடுத்தாள்.

நான் பேசிவிட்டு, போனை அவளிடம் கொடுத்து தேங்க்ஸ் என்றேன்.

படிக்கறீங்களா ? என்று மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தேன்..

அவள் சிரித்தவாறே , இல்லைங்க நான் SBI பாங்க்ல அக்கௌண்ட்ஸ் பிரிவில் வேலை பார்க்கிறேன் என்றாள்.

உங்க ஆபீஸ் சென்னையிலா? கோவையிலா ? என்றேன்.

கோவைக்கு அருகிலுள்ள அவினாசி என்றாள்..

மேலும் சில நிமிடங்கள் அவளுடன் பேசியதில் ஒரு பேருந்து விபத்தில் பெற்றோர் இறந்த பின் தாத்தா பாட்டியுடன் இருப்பதாகவும் ,சொந்த ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள நெகமம் என்றும் , வேலை காரணமாக தாத்தா , பாட்டி மற்றும் தம்பி பிரகாஷ் உடன் அவினாசியில் வசிப்பதாக தெரிந்து கொண்டேன்.

என் பெயர் கிருஷ்ணா , சென்னையில் லெதர் கம்பெனியில் வேலை பார்பதாக கூறினேன்.

ஸாரி என் பேர சொல்ல மறந்துவிட்டேன் என்றவாறு “சக்தி” என அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

மேலும் பேச வாயை திறக்கும் முன் கண்டக்டர் “திண்டிவனம்   திண்டிவனம்” என்றார், வண்டி 10 நிமிஷம் அங்கு நிற்கும் என்றார்.

நான் சக்தியிடம் “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா ? ” என்றேன்.

இல்லை வேண்டாம் என்றாள்.

சரி என்றவாறு கீழே இறங்கி,  டீ  சாப்பிட்டு விட்டு..2 பிஸ்கட் பேக்கட்டும், ரீசார்ஜ் கார்டும்  வாங்கினேன்.

பஸ் அருகில் வந்த போது, பிரகாஷ் பாட்டியிடம் ஏதோ கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அவனை அழைத்து என்ன வேண்டும் என்றேன். அவன் கேக்கை கைகாட்ட , வாங்கிக் கொடுத்து பஸ்ஸில் அமர்ந்த பின் பஸ் புறப்பட்டது.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். கண்டக்டரின் குரல் கேட்டு விழித்து பார்த்த பொழுது உளுந்தூர்பேட்டையில் பஸ் நின்றது.

“20 நிமிடம் பஸ் நிற்கும் எல்லோரும் சாப்பிட்டு வாருங்கள் ” என்றார் கண்டக்டர்.

எல்லோருடன் நானும் இறங்கினேன்.சாப்பாடு டோக்கன் வாங்கி வந்து சாப்பிட ஆரம்பித்த பின் சக்தி வரவில்லையே என்று பார்த்தேன். சாப்பிட்டு முடித்து பஸ்ஸில் ஏற சென்றேன், சீட்டில் அமர்ந்தபடியே சக்தி, பாட்டி மற்றும் தம்பியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்னை பார்த்த சக்தி “Hello கிருஷ்ணா, சாப்பிடலாம் வாங்க” என்றாள்.

இப்பதாங்க சாப்பிட்டு வந்தேன் என்று கூறிவிட்டு ,பின் சீட்டில் அமர்ந்து  செல்போனில் FM ஐ ஆன் செய்தேன்…..என் மனமறிந்து பாடியது…

“என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய்…அய்யய்யோ..

ஒரு மாயம் செய்தாய் நெஞ்சை காயம் செய்தாய் ..அய்யய்யோ..

கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து தள்ளாட செய்ததடி ஓ ஓஒ…”

பஸ் நகர ஆரம்பித்தது. அவளிடம் போன் நம்பரை வாங்கி விட வேண்டும் என்று நினைத்தேன். ஈரோடு வந்த போது பிரகாஷ் என்னிடம் அங்கிள் ” உங்களுக்கு ஒரு ஜோக்கை forward பண்ணறேன் உங்க போன் நம்பர் சொல்லுங்க” என்றான்.

இதுதான் சமயம் என்று சிரித்தபடியே நானும் போன் நம்பரை கொடுத்தேன்.

மெசேஜில் வந்த அவள் நம்பரை save செய்தேன்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.பேசியதில் “கிளி சீக்கரம் மாட்டிக் கொள்ளும் போலிருந்தது”. போன் நம்பர் வேற இருக்கு இன்னும் ஒரு வாரத்தில் நம்ம வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரம், கண்டக்டர் “அவிநாசி எல்லாம் இறங்கு” என்றார். மணி பார்த்தேன் இரவு 7 மணி.

அவள் இறங்கும் பொழுது என்ன பேசலாம் என யோசிக்கையில் , அவள் பாட்டி என்னிடம்..”தம்பி, கடைசி சீட்டில் இவங்க தாத்தா இருக்கிறார், அவருக்கு கொஞ்சம் உடம்பு முடியல , அவரை மெதுவா கீழே இறக்கி விடுறியாப்பா” என்றார்.

அவளுடன் பேச முடியாத எரிச்சலோடு பின்னாடி சென்று, அவரை கைத்தாங்கலாக கீழே இறக்கிவிட்டு நின்றேன். முன் வழியாக அவள் பாட்டியும் தம்பியும் இறங்கினார்கள். அவளும் இறங்குவாள் என பார்த்துக் கொண்டிருக்கையில், இரு கைகளிலும் செருப்பை மாட்டிக் கொண்டு அவள் தவழ்ந்தபடியே கீழே இறங்கினாள்.

அந்த ஒரு நிமிடம் என் தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் வலித்தது. இமைக்க மறந்து அவளை பார்த்தேன்.அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே Thanks என்றாள். என்னால் எதுவும் கூற முடியவில்லை.

பதிலுக்கு சிரிக்க முயன்று தோற்றுப் போய் கண்களில் கண்ணீரோடு பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். மற்ற பெண்கள் வரிசையில் அவளையும் தவறாக நினைத்தை எண்ணி எனக்கு அழுகை வந்தது. இம்முறை அவள் சிரிப்பு என் காமத்தை தொலைத்து காதலை தூண்டியது. அவள் மீதான காதலோடு கோவை வந்தடைந்தேன்.

“என்னவளை படைக்கையில் மட்டும் நீ

பாதியில் உறங்கி்யதேன் பிரம்மனே ?? “

என யோசித்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தேன்

நிச்சயதார்த்த பரபரப்போடு இருந்த வீட்டை அடைந்தேன். உள்ளே அப்பாவும் மைதிலியும் சாப்பிட அம்மா பரிமாறிக் கொண்டிருந்தார்.என்னை பார்த்ததும் சாப்பிட அழைத்தார்கள். அப்பாவின் அருகில் சாப்பிட அமர்ந்த எனக்கு , சாப்பிட மனமில்லாமல் சாப்பாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னடா ? என்றார் அப்பா..

சற்றே தயக்கத்தோடு, பஸ்ஸில் நடந்த அனைத்தும் கூறி அவள் மேல் என் காதலையும் கூறினேன்.அப்பாவும் அம்மாவும் என்னை திட்ட ஆரம்பித்தார்கள்.

என் முடிவில் மாற்றம் இல்லை என கூறி நின்றேன். என்னை புரிந்து கொண்ட மைதிலி அவள் காதலை விட்டுக் கொடுத்து , என் காதலுக்காக அப்பாவிடம் பேசினாள்.மைதிலியே கூறிய பின் அப்பாவும் அம்மாவும் சம்மதம் சொன்னார்கள்.

அவள் போன் நம்பரை வைத்து அவள் முகவரியை கண்டு பிடித்து, அவளை தேடிச் சென்று என் காதலை கூறினேன்.முதலில் மறுத்த அவள், பின் அவளுக்காக நான் என் நிச்சயதார்த்தை நிறுத்தியதை கேட்ட பின் ஒருவாறு சம்மதித்தாள். பின் அவள் தாத்தா பாட்டியிடம் பேசி அவளை கைபிடித்தேன்.

இந்த இரண்டாண்டு வாழ்கையின் சந்தோஷத்திற்கு அடையாளமாக திவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது எங்களுக்கு. 17.10.2007 அன்று என்னையும் மனிதனாய் மாற்றியது அந்த பேருந்து பயணம்.